பொது செய்தி

இந்தியா

'ஒப்பந்தம் ஏற்படும் வரை எல்லை பிரச்னை நீடிக்கும்!'

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :''இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்படும் வரை இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் பிரச்னைகள் நீடிக்கவே செய்யும்,'' என, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.டில்லியில் பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா கூட்டம் நடந்தது. இதில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது:இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்படாதவரை
'ஒப்பந்தம் ஏற்படும் வரை எல்லை பிரச்னை நீடிக்கும்!'

புதுடில்லி :''இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்படும் வரை இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் பிரச்னைகள் நீடிக்கவே செய்யும்,'' என, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.டில்லியில் பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழா கூட்டம் நடந்தது.
இதில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது:இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்படாதவரை எல்லையில் பிரச்னைகள் தொடரும். கடந்த முறை எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.


latest tamil news


அதுபோல மீண்டும் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அண்டை நாடு, அதிக அளவில் பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி, ஜம்மு - காஷ்மீரில் அன்னிய ஊடுருவலையும், பயங்கர வாதத்தையும் தடுக்க, சிறந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்கன் உட்பட இந்தியாவின் அமைதிக்கு எந்த வகையான அச்சுறுத்தல் வந்தாலும் அதை சமாளிப்பதற்கான திட்டங்களை ராணுவம் உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202105:47:22 IST Report Abuse
அப்புசாமி 17 தடவை சுற்றிச் சுற்றிப்.பேசி கடைசியில் கண்டு புடிச்சுட்டோம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-அக்-202105:42:34 IST Report Abuse
Kasimani Baskaran ஒவ்வொரு எதிரியாக அடிக்க வேண்டும். நமக்கு முதல் எதிரி - அதுவும் தீவிரவாதிகளை மட்டும் உள்ளே அனுப்பும் சூழ்ச்சிக்கார எதிரியை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பின்னர் சீனா தானே வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-அக்-202102:39:09 IST Report Abuse
மலரின் மகள் ஒரு வலிமையாக தோற்றமளிக்கும் எதிரி இருப்பது போட்டியாளனுக்கு முன்னேற்றத்திற்கு வெற்றிக்கு வழிவகுக்கும். நமக்கு சீனன் என்ற எதிரி இருக்கட்டும். ராணுவத்தை வேகமாக வளப்படுத்தி கொண்டே செல்வோம். உலகின் முதலிடத்தை பிடிப்போம். நாம் இழந்து விட்ட பகுதிகளை மீட்டு எடுக்காத வரையில் பிரச்சினை தீரும் என்று சொல்வதற்கு இல்லை. எல்லை பிரைச்சினையை தீத்தாலும் அந்த மூடன் மூர்க்கத்தனம் செய்யத்தான் செய்வான். அடித்து துவம்சம் செய்து அவனை ஓட ஓட விரட்டினால் தான் புத்தி வரும் அவனுக்கு. பத்திரிக்கை சோசியல் மீடியாக்கள் என்று பலவற்றை சாதகமாக்கி கொண்டு எதோ அவன் மிகப்பெரிய ராணுவ சக்தி படைத்தவன் என்று பீற்றி கொண்டு ஜம்பம் அடித்து கொண்டிருக்கிறான். பயங்கரவாதத்தை எதிர்த்திருக்கிறானா என்றால் இல்லவே இல்லை. எங்காவது வெற்றி பெற்றிருக்கிறதா அவர்களது ராணுவம் என்றால் அதுவும் இல்லை. கட்டிட கலை மற்றும் போக்குவரத்தில் உடலுழைப்பில் அதிக நேரம் உழைக்க செய்யும் தேசமது. மற்றபடி அனைத்தும் திருடியது தான். எத்துணை நாளைக்குத்தான் திருட்டு தொழிலில் முன்னேறி விட முடியும். தொழில் நுட்பங்கள் அவர்களாக செய்தது கிடையாது. அமெரிக்க தொழில் நுட்ப வல்லுநர்களை வாங்கி கூடாது மற்றும் அவர்கள் மூலமாக ரிவர்ஸ் இஞ்சினீரிங் மூலம் திருடுவதை செய்தவன் அவன். போதை பொருட்கள் சீட்டத்தில் கேசினோ ஏமாற்று வேலை என்று பணம் சம்பாதித்த தேசமது. கல்லுளி மாங்கனி போல இருப்பவர்களை நம்பவே கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்கு பெரிய திறனும் இருக்காது என்பதை உணரவேண்டும். சீனன் மட்டுமே நமக்கு எதிரி அல்ல. பல மேற்கத்திய தேசங்களும் தான். நமது வாழ்க்கை முறை, இயற்கை வளங்களால் பொறாமை படும் பல்வேறு தேசங்கள் உள்ளூர எதிரியாகத்தான் இருக்கிறார்கள். நமது மதத்தின் மீது நமக்கிருக்கும் பற்று அதன் உன்னதம் சில பலருக்கு பொறாமையாக இருக்கிறது. உள்ளுக்குள் வயிற்றெரிச்சல்கள் கொண்டுள்ளனர். நம்முடைய வளர்ச்சியை கண்டு அவர்களுக்கு எரிச்சலாகவும் பொறுமையாகவும் இருக்கிறது. ஒரு யுத்தம் என்று வந்தால் அதில் நமது திறமை பளிச்சிடும். உலகம் அதுனால் முதல் நம்மை கண்டு பயபக்தி கொள்ளும். தலைவணங்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X