பொது செய்தி

தமிழ்நாடு

மீட்பு நில விபரம் அறிய தனி களம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விபரத்தை, அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்ற, தனிக்களம் ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முடி காணிக்கை கொடுக்க இலவசம், பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர் அன்னதானம், பக்தர்கள் குறைகேட்பு மையம் என,

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விபரத்தை, அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்ற, தனிக்களம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முடி காணிக்கை கொடுக்க இலவசம், பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர் அன்னதானம், பக்தர்கள் குறைகேட்பு மையம் என, பல்வேறு திட்டங்கள் பக்தர்களின் வரவேற்பை பெற்று உள்ளன.இந்த வரிசையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பதில், அறநிலையத் துறை உத்வேகம் காட்டி வருகிறது.

மே 7 முதல், கடந்த 18ம் தேதி வரை 355 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, 1,133 கோடி ரூபாய் மதிப்புள்ள 310.80 ஏக்கர் நிலம்; 3 கிரவுண்டு கட்டடம்; 15 கிரவுண்டு குளம் ஆகியவை மீட்கப் பட்டு உள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள், சொத்துக்களின் விபரங்களை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், அறநிலையத் துறை இணையதளத்தில் தனிக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், 'திருக்கோவில் நிலம் மீட்பு விபரம்' என்ற தலைப்பில், ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட நிலங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்த சில நாட்களில், மீட்கப்பட்ட அனைத்து நிலங்கள், சொத்துக்களின் விபரங்கள், அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என, கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
-- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X