கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல், ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே நடக்க உள்ளதால், என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதை தெரிவிக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலர் இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், 'ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பார்வையாளர்களாக, மத்திய அரசு பணியாளர்களை

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல், ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே நடக்க உள்ளதால், என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதை தெரிவிக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலர் இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், 'ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பார்வையாளர்களாக, மத்திய அரசு பணியாளர்களை நியமிப்பது; மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு. விசாரணை'பிரசாரம் முதல் முடிவு அறிவிக்கும் வரை, கண்காணிப்பு கேமரா, வீடியோ பதிவு உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அளித்துள்ளார். அதை பரிசீலிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச், பிரதான கட்சியின் மனுவுக்கு, மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, இவ்வழக்கு மீண்டும் முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்ச்சி தான், இப்போது நடக்கிறது. அப்போது பின்பற்றிய நடைமுறைகளை, இப்போதும் பின்பற்ற வேண்டும்.


வீடியோ பதிவு



''ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்றில் ஒரு ஓட்டுச்சாவடியில் கண்காணிப்பு கேமரா; ஓட்டுப்பதிவு மையத்தில் இருந்து ஓட்டுப் பெட்டிகளை வைக்கும் இடம் வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லும் வரையும், வீடியோ பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

மேலும், சில பிரச்னைகளை, மாநில தேர்தல் ஆணைம் பரிசீலிக்க வில்லை எனவும் மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''சட்டசபை தேர்தல் உடன், இந்த தேர்தலை ஒப்பிடக் கூடாது. ஒரு லட்சத்துக்கும் மேல் வேட்பாளர்கள் உள்ளனர்,'' என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, 'முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது தமிழகம். இங்கே, தொழில்நுட்ப வசதி உள்ளது. எந்தப் புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அவசியம். 'ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க உள்ளது. என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதை, அதிகாரிகளுடன் கலந்து பேசி பதில் கூறுங்கள்' என அட்வகேட் ஜெனரலிடம் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞரும், அட்வகேட் ஜெனரலிடம் பரிந்துரைகள் அளிக்கலாம் எனவும், அதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஆராயலாம் என்றும் முதல் பெஞ்ச் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X