அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடியில் மகப்பேறு மையம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் வேளாண், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றை, பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்
 ரூ.10 கோடியில் மகப்பேறு மையம்  முதல்வர் ஸ்டாலின் திறப்பு

தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் வேளாண், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் ஆகியவற்றை, பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை பார்வையிட்டார்.
விழாவில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய, ஏழு பஞ்., தலைவர்கள், சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கி பாராட்டினார். மூன்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாழ்த்து

தர்மபுரி மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒகேனக்கல்லில் குடிநீர் திட்டப்பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின், தர்மபுரி அடுத்த ஆட்டுகாரன்பட்டியில் உள்ள ஆக்சலியம் என்ற தனியார் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் கொரோனா நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

ஒகேனக்கல்லில் ஆய்வு பணியை முடித்து விட்டு தர்மபுரிக்கு திரும்பும் போது, பென்னாகரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் திடீரென நுழைந்தார்.


இன்ப அதிர்ச்சி



அங்கு, விடுதியில் பின்பற்றப்படும் கொரோனா நடவடிக்கை குறித்தும், மாணவர்களுக்கு விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விடுதியில் இருந்த, பிளஸ் 1 மாணவன் விஜயின் பிறந்த நாள் குறித்த தகவல் அறிந்த, முதல்வர் ஸ்டாலின், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். விஜய், 10ம் வகுப்பு முடித்து விட்டு, ஓராண்டு பள்ளி செல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தான், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X