பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்கள் தயாரிப்போரை கண்காணிக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு!

Updated : அக் 01, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (18+ 15)
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும், கத்தி, வாள், வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தயாரிப்போரை கண்காணிக்கும்படி, கமிஷனர், எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார். ஆயுதங்களுக்கு 'ஆர்டர்' கொடுப்போரின் விபரங்களை சேகரிக்கவும் கட்டளையிட்டு உள்ளதுடன், அவர்களின் பின்னணி குறித்து சல்லடை போட்டு விசாரிக்கும்படி, அடுத்தடுத்து அதிரடியாக
 ஆயுதங்கள் தயாரிப்பு, கண்காணிக்க ,டி.ஜி.பி., சைலேந்திரபாபு  உத்தரவு!

சென்னை : தமிழகம் முழுதும், கத்தி, வாள், வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தயாரிப்போரை கண்காணிக்கும்படி, கமிஷனர், எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார். ஆயுதங்களுக்கு 'ஆர்டர்' கொடுப்போரின் விபரங்களை சேகரிக்கவும் கட்டளையிட்டு உள்ளதுடன், அவர்களின் பின்னணி குறித்து சல்லடை போட்டு விசாரிக்கும்படி,
அடுத்தடுத்து அதிரடியாக ஆணையிட்டுள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகள், கூலிப்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திரட்டுவோர், சதி செயல்களுக்கு திட்டம் தீட்டுவோரும்
அதிகரித்து வருகின்றனர். இது குறித்து, சில தினங்களுக்கு முன் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை அழைத்து, கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டார். எனினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று போலீசார் மழுப்பி வந்தனர்.கவர்னர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் சந்திப்புக்கு பின், மாநிலம் முழுதும் ரவுடிகள் மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., முடுக்கி விட்டுள்ளார்.


அதிரடி 'ஆப்பரேஷன்'போலீசார் செப்., 23 முதல், இரவு, பகலாக, 52 மணி நேரம், ரவுடிகளின் வீடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கள்ளக் காதலிகளின் வீடுகள், பதுங்கும் இடங்கள் என, பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.'ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' என பெயரிட்டு, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கொலை வழக்கில் சிக்கிய 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், கொலைக்கு பயன்படுத்தும் 1,110 கத்தி, அரிவாள், ஈட்டி, வீச்சரிவாள் மற்றும் ஏழு துப்பாக்கிகள் என, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பல்வேறு கட்டுப்பாடுகள்அதன்பின், ஆயுதங்கள் தயாரிப்போரிடம் 579 இடங்களில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் 2,548 பேர் பங்கேற்றனர். ஆயுத விற்பனை குறித்து, பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன.இது குறித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

* போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள், கத்தி, வாள், வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தயாரிப்போர் மற்றும் தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்

* அவர்களிடம் பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, மொபைல் போன் எண்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்

* விவசாயம், வீட்டு உபயோகம் தவிர, மற்ற காரணங்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாத நபர்களுக்கு விற்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்

* ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் கட்டாயம் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். இதை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால், காவல் துறை உதவி செய்ய வேண்டும்

* குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிவிப்போருக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்; அவர்கள் குறித்து ரகசியம் காக்க வேண்டும்

* தவறானவர்களின் கைகளுக்கு பயங்கர ஆயுதங்கள் செல்வதை தடுக்க, காவல் நிலைய அதிகாரிகள் அனைவரும் மேற்கண்ட உத்தரவுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


டி.ஜி.பி.,யின் அதிரடிஉத்தரவு மற்றும் போலீசாரின் தொடர் நடவடிக்கைகள் எல்லாம், ஆங்காங்கே வாலாட்டி வரும் ரவுடிகள் முதல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் வரை அனைவரையும் கலக்கம் அடைய வைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
01-அக்-202123:31:26 IST Report Abuse
Sivagiri அப்போ - ரௌடி யாரு - குற்றவாளி யாருன்னு கண்டு பிடிக்கும் திறமை காவல் துறைக்கு இல்லை? அரிவாள் செய்பவனை பிடித்தால் கொலைகாரனை பிடித்து விடலாமா? சினிமாவில் கூட இந்த மாதிரி யோசிக்க மாட்டாங்கய்யா? சில நேரம் ரொம்ப அறிவாளிகள் இப்படித்தான் யோசிப்பாங்க? ( அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் சோம்பேறிகள்தான் இப்டி யோசிப்பாங்க ) இல்லை . . ?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-அக்-202122:48:47 IST Report Abuse
Mohan திமுக அரசில் ஒரு நேர்மையான அதிகாரி. அப்படி இல்லை சார். அதுக்கு காரணம் நம் புதிய கவர்னர். நீங்களே ஏன் லேபிள் ஒட்டுறீங்க.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
01-அக்-202119:32:54 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் என்ன ஆடர் போட்டாலும் தில்லுமுள்ளில் கைதேர்ந்தவர்கள். சென்ற தமிழக அரசவை தேர்தலிலேயாயே பல தில்லுமுல்லுகள் செய்தது யாராலும் கண்டுபிடிக்க முடியாத படி செதுள்ளார்கள். அதுபோலாக தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடாவை மிக கச்சிதமாகவும் தேர்தால் பறக்கும்படியால் ஒன்றுமே செய்யாயிலாமல் இந்த விவரம் கெட்ட ஆ தி மு க்கா தான் ஆட்சியிலிருந்தும் பிடிபட்டது. எல்லாம் பழம் திண்ணி கொட்டை போட்டதுகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X