அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் ஜெயிக்கணும்: பழனிசாமி 'புலம்பல்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
இடைப்பாடி:'ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும்' என, கட்சியினருக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தர விட்டார்.சேலம் மாவட்டம் இடைப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, வரும் 9ல் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமி, இடைப்பாடி தொகுதியில் உள்ள ஒன்றிய குழு தலைவர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை

இடைப்பாடி:'ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும்' என, கட்சியினருக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்தர விட்டார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, வரும் 9ல் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமி, இடைப்பாடி தொகுதியில் உள்ள ஒன்றிய குழு தலைவர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், 'தாதாபுரம் தலைவர் பதவியை, அ.தி.மு.க., மீண்டும் கைப்பற்ற வேண்டும். 'அடுத்து வரவுள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் இடைப்பாடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றதை போன்று, 100 சதவீத வெற்றியை பெறும் அளவு, கட்சியினர் பணிபுரிய வேண்டும். 'இத்தொகுதியில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X