சென்னைக்கு பெரிய 'விசில்' அடிங்க: தோனி சிக்சரில் 'சூப்பர்' வெற்றி

Updated : அக் 01, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி சிக்சர் அடித்து கைகொடுக்க சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணியில் சாம் கர்ரான் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ இடம் பிடித்தார்.
IPL 2021, MS Dhoni, SRH vs CSK, Chennai IPL, CSK

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி சிக்சர் அடித்து கைகொடுக்க சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.

எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணியில் சாம் கர்ரான் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


சகா ஆறுதல்:


ஐதராபாத் அணிக்கு ஜேசன் ராய், விரிதிமன் சகா ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. தீபக் சகார் வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார் சகா. முதல் விக்கெட்டுக்கு 23 ரன் சேர்த்த போது ஹேசல்வுட் 'வேகத்தில்' ராய் (2) வெளியேறினார். ஹேசல்வுட், தீபக் சகார் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் கேன் வில்லியம்சன் (11), டுவைன் பிராவோ பந்தில் அவுட்டானார்.


latest tamil news


தொடர்ந்து அசத்திய பிராவோ பந்தில் பிரியம் கார்க் (7) சரணடைந்தார். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சகா. இவர், 46 பந்தில் 44 ரன் (2 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்திருந்த போது ரவிந்திர ஜடேஜா 'சுழலில்' சிக்கினார்.


ஹேசல்வுட் அபாரம்:


பின் இணைந்த அபிஷேக் சர்மா, அப்துல் சமத் ஜோடி நிதானமாக விளையாடியது. ஷர்துல் தாகூர் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டிய இவர்கள், ஹேசல்வுட் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்த போது ஹேசல்வுட் 'வேகத்தில்' அபிஷேக் (18), சமத் (18) அடுத்தடுத்து அவுட்டாகினர். ஷர்துல் தாகூர் பந்தில் ஜேசன் ஹோல்டர் (5) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஷித் கான், ஷர்துல், தீபக் சகார் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. ரஷித் (17), புவனேஷ்வர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் ஹேசல்வுட் 3, பிராவோ 2 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news




சூப்பர் துவக்கம்:


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டுபிளசி, ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். மறுமுனையில் அசத்திய ருதுராஜ், புவனேஷ்வர், ரஷித் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார்.

முதல் விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்த போது ஹோல்டர் பந்தில் ருதுராஜ் (45) அவுட்டானார். மொயீன் அலி (17) நிலைக்கவில்லை. ஹோல்டர் வீசிய 16வது ஓவரில் ரெய்னா (2), டுபிளசி (41) அவுட்டாகினர்.

அடுத்து வந்த அம்பதி ராயுடு, புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் 3 ரன் தேவைப்பட்டது. சித்தார்த் கவுல் வீசிய 20வது ஓவரின் 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் தோனி வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (17), தோனி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.


11வது முறை


சென்னை அணி 11 போட்டியில், 9 வெற்றி, 2 தோல்வி என, 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கான இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. தவிர ஐ.பி.எல்., அரங்கில் 11வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. கடந்த சீசனில் (2020) மட்டும் லீக் சுற்றோடு திரும்பியது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
01-அக்-202113:45:47 IST Report Abuse
r ravichandran இன்று உலக அளவில் கூட தோனி அளவிற்கு மிக சிறந்த கேப்டன் யாரும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியிலும் இல்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவருக்கும், எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் இவருக்கு தான் இருக்கிறது. CSK அணி இவருக்கு 7.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இவர் CSK விட்டு விலகினால் 20 கோடி கொடுத்து வாங்க பல அணிகள் தயாராக இருக்கின்றன. இவரது கேப்டன்ஷிப் தான் இவரது பலம். இது தான் யதார்த்தம். வயது ஆனால் வரக்கூடிய தளர்வு இவருக்கும் வரும் என்பது அனைவருக்கும் தெரியும்..
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-அக்-202111:18:18 IST Report Abuse
Girija போய்யா தல யால மேட்ச் காலியாய் இருக்கும் தப்பித்தது சி எஸ் கே. தல கண்ணாடி அணிந்து பேட் செய்தால் தான் தேறலாம். தல பேட்டிங் செய்ய வருவது வடிவேலு சண்டைக்கு போகும் கைப்பிள்ளை மாதிரி இருக்கு.
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
01-அக்-202103:42:38 IST Report Abuse
SanDan தோனிக்கு ஆட இவ்வளவு சான்ஸ் குடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர் அவரை அஜித் வடேகர் தாமாகச் செய்தது போல் non playing captain ஆக்கி விடலாம் அனாவசிய வீரத்துடன் சண்டைக்கு வரும் டூமீல்ஸ்களுக்கு - தோணியால்தான் உலகக் கோப்பையை இழந்தோம் என்பது நினைவில்லையா
Rate this:
01-அக்-202109:03:33 IST Report Abuse
Tgsoundarrajan Baluஉனக்கு தனியே பிடிக்கலைன்னா வாயை மூடிக்கிட்டு இரு...
Rate this:
Ramakrishnan - Pollachi,இந்தியா
01-அக்-202111:15:02 IST Report Abuse
Ramakrishnanதோணியால உலகக் கோப்பையை இழந்தோம யார் சொன்னது அதுக்கு முன்னாடி 3 ரன்னுக்கு 3 அவுட் ஆகிட்டு போனான்ங்களே அவனுங்க கரணம் இல்லையா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X