மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் 30 அடி ஆழத்தில் மண் சரிவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு:மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் 30 அடி ஆழத்தில் மண் சரிந்துள்ளது. இது மூடப்பட்ட கிணறாகும். மண் சரிவால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பெங்களூரின் டானரி சாலையில், கொட்டிகரே -- நாகவாரா வரை, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்தது. இதே பாதையில் சமீபத்தில் சுரங்கம் தோண்டி இயந்திரம் வெளியே வந்தது. இப்பகுதியில் ஏற்கனவே கிணறு இருந்த இடத்தில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில்

பெங்களூரு:மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் 30 அடி ஆழத்தில் மண் சரிந்துள்ளது. இது மூடப்பட்ட கிணறாகும். மண் சரிவால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
பெங்களூரின் டானரி சாலையில், கொட்டிகரே -- நாகவாரா வரை, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்தது. இதே பாதையில் சமீபத்தில் சுரங்கம் தோண்டி இயந்திரம் வெளியே வந்தது. இப்பகுதியில் ஏற்கனவே கிணறு இருந்த இடத்தில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் 30 அடி ஆழத்தில் மண் சரிந்துள்ளது.

சுரங்கப்பணிகள் நடந்துள்ள இடத்திலேயே திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த இடம் ஜபி என்பவருக்கு சொந்தமானது.மண் சரிவுக்கு மெட்ரோ பணிகளே காரணம். அந்த இடத்தை பெற்றுக்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார்.

கொட்டிகரே -- நாகவாரா மெட்ரோ பணிகள் நடக்கும் போது, டானரி சாலையில், வீட்டு முன் பத்ரா இயந்திரம், சுரங்கம் தோண்டும் போது, 12 அடி ஆழமான கிணறு இடிந்தது. இங்கு வசித்தவர்கள் இடம் மாற்றப்பட்டனர்.கிணற்றுக்கு கான்கிரிட் போட்டு, சுரங்கம் தோண்ட பி.எம்.ஆர்.சி.எல்., முடிவு செய்தது. வீட்டை பரிசீலித்து தேவை ஏற்பட்டால் புதிய வீடு கட்டித்தரவும், பி.எம்.ஆர்.சி.எல்., தயாராகவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X