பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கோர்ஸ் குதிரைக்கு தேனியில் இருந்து அருகம்புல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
தேனி:தேனி மாவட்டத்தில் வயல்களில் வளரும் அருகம்புல்லை சேகரித்து உலர்த்தி வாரம் 3 டன் கிண்டி ரேஸ் கோர்ஸ் குதிரைக்கு தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.தேனி மாவட்டத்தில் விளையும் மா, பலா, வாழை விளை பொருட்களுக்கு சுவை தன்மை அதிகம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு சீசனுக்கு ஏற்ப அனுப்பப்படுகிறது. கிலோ 4 ரூபாய் இதன் வரிசையில் வரப்பு, வயல்கள், தோட்டங்களில்
 கிண்டி ரேஸ் கோர்ஸ் குதிரைக்கு தேனியில் இருந்து அருகம்புல்

தேனி:தேனி மாவட்டத்தில் வயல்களில் வளரும் அருகம்புல்லை சேகரித்து உலர்த்தி வாரம் 3 டன் கிண்டி ரேஸ் கோர்ஸ் குதிரைக்கு தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் விளையும் மா, பலா, வாழை விளை பொருட்களுக்கு சுவை தன்மை அதிகம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு சீசனுக்கு ஏற்ப அனுப்பப்படுகிறது.


கிலோ 4 ரூபாய்



இதன் வரிசையில் வரப்பு, வயல்கள், தோட்டங்களில் களைச்செடிகளாக வளரும் அருகம்புல்லும் இணைந்து உள்ளது. காய்ந்த அருகம்புல் சென்னை கிண்டி ரேஸ் குதிரைகளுக்கு தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. தேவதானப்பட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜா கூறியதாவது: பெரியகுளம், சின்னமனுார், கம்பம், போடி பகுதிகளில் அருகம்புல் சேகரிப்பாளர்கள் 30 பேர் உள்ளனர். கிலோ 4 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அதை உலர்த்தும் போது புல்லில் ஈரம் காய்ந்து கிலோவிற்கு 300 கிராம் கிடைக்கும். 1 கிலோ 10 ரூபாய் வீதம் சென்னை கிண்டி குதிரை ரேஸ் கிளப்பிற்கு வாரம் 3 டன் அனுப்புகிறோம்.காய்ந்த அருகம்புல்லை குதிரைகள் விரும்பி சாப்பிடும்.


பல்வேறு சத்துக்கள்

பச்சையம் சத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிப்பது உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. அருகம்புல்லில் இருந்து வெளியேறும் பால் போன்ற திரவம், குதிரைகளின் முட்டிக்கு வலிமையை கொடுக்கிறது. இத்தொழிலால், புல் அறுப்பவர்கள், உலர்த்துபவர்கள் உட்பட 60 பேர் பயனடைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X