முதல்வர் பசவராஜ் பொம்மை குறைகள் கேட்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு:பிரதமர் நரேந்திர மோடி போல, முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், எம்.பி.,க்களிடம் தனித்தனியாக குறைகள் கேட்டறிந்தார். தங்கள் மனதில் இருந்த குமுறல்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.பிரதமர் மோடி, வாரத்தில் ஒரு நாள், பா.ஜ., - எம்.பி.,க்களை சந்தித்து பேசி, குறைகளை கேட்டறிவது வழக்கம் என கூறப்படுகிறது. அதுபோல, முதல்வர் பசவராஜ் பொம்மையும், பா.ஜ., -
முதல்வர் பசவராஜ் பொம்மை குறைகள் கேட்பு

பெங்களூரு:பிரதமர் நரேந்திர மோடி போல, முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், எம்.பி.,க்களிடம் தனித்தனியாக குறைகள் கேட்டறிந்தார். தங்கள் மனதில் இருந்த குமுறல்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி, வாரத்தில் ஒரு நாள், பா.ஜ., - எம்.பி.,க்களை சந்தித்து பேசி, குறைகளை கேட்டறிவது வழக்கம் என கூறப்படுகிறது. அதுபோல, முதல்வர் பசவராஜ் பொம்மையும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளார்.

வாரந்தோறும் வியாழக்கிழமை, காலை 11:00 மணி முதல், பகல் 3:00 மணி வரை, ரேஸ் கோர்ஸ் சாலையின், ரேஸ் வியு காட்டேஜ், இல்லம் எண் 1ல், அமைச்சர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்கலாம். நம்பிக்கைமுதல்வர் தங்களின் பிரச்னைகளை கேட்பதில்லை என, அதிருப்தி எழுந்ததால், அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.

இதன் மூலம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களின் நம்பிக்கையை பெற திட்டமிட்டு உள்ளார்.முதல் நாளான நேற்று, அம்ருத் தேசாய், மசாலே ஜெய்ராம், பெல்லி பிரகாஷ், கிருஷ்ணப்பா, ரகு, ரவி சுப்பிரமணியா, உதய் கருடாச்சார், சதீஷ்ரெட்டி, ப்ரீதம் கவுடா, பரண்ணா முனவள்ளி.உமாநாத் கோட்யான், மாடாளு விருபாக் ஷப்பா, சித்து சவதி, நேரு ஓலேகர், பூர்ணிமா உட்பட 25க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் விஸ்வநாத் எம்.எல்.சி., கொப்பால் எம்.பி., கரடி சங்கண்ணா பலரும் முதல்வரை சந்தித்து பேசினர்.

ஒவ்வொருவருக்கும் தனி தனியாக சந்தித்து பேச வாய்ப்பு தரப்பட்டதால், 10 முதல், 15 நிமிடங்கள் பேசினர்.பெரும்பாலானோர், தங்கள் தொகுதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து நிதி வழங்காததால் பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டில் சட்டசபை தேர்தல் வருவதால் உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்று பெரிய கோப்புகளுடன் வந்து வலியுறுத்தினர்.

இன்னும் சிலரோ, 'மூன்று, நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகியுள்ளோம்; இதுவரை எந்த பதவியும் தரவில்லை. தொகுதியில் சுற்றும் போது பலரும் கேள்வி கேட்பதால் பதில் சொல்ல முடியவில்லை.


குமுறல்

'கட்சிக்கு நேர்மையாக இருந்தும் எங்களுக்கு பதவி வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலியாக உள்ள அமைச்சர் பதவி அல்லது கேபினெட் அந்தஸ்துடைய வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

முதல்வரை சந்தித்தவர்களில் அதிகமானோர் பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் தான். அவர்கள் அனைவருமே அடுத்தாண்டு மார்ச்சுக்குள் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளதால் சாலை, குடிநீர், எல்.இ.டி., தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு உடனடியாக நிதி விடுவிக்கும்படி கேட்டு கொண்டனர்.

அனைவரது கோரிக்கைகளையும் கேட்ட முதல்வர், முடிந்த வரை உங்கள் பிரச்னைகளை விரைவில் முடித்து தர நடவடிக்கை எடுப்பதாகவும், பதவி குறித்து கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதாகவும் பொறுமையுடன் பதில் சொல்லி அனுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X