வேளாண் பல்கலை பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை இன்று துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலை பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை இன்று துவக்கம் 

Added : செப் 30, 2021
Share
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப் படிப்புக்கான சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.கோவை வேளாண் பல்கலையின் கீழ், நான்கு உறுப்பு கல்வி நிலையங்கள், மூன்று அரசு மற்றும் 10 தனியார் இணைப்பு கல்வி நிலையங்களில் பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பல்கலையின் இணையதளம் https://tnau.ac.in/diplomaadmission வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். பல்கலை டீன் கல்யாணசுந்தரம்

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப் படிப்புக்கான சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.

கோவை வேளாண் பல்கலையின் கீழ், நான்கு உறுப்பு கல்வி நிலையங்கள், மூன்று அரசு மற்றும் 10 தனியார் இணைப்பு கல்வி நிலையங்களில் பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பல்கலையின் இணையதளம் https://tnau.ac.in/diplomaadmission வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலையால் புதிதாக துவங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு குமுளூர் உறுப்பு கல்வி நிலையத்தில் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாடு தோட்டக்கலை துறையால், தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் மையங்களில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல் வேளாண் பல்கலையின் இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். இணையதளத்தில் உள்ள கையேட்டை பதிவிறக்கம் செய்து, விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அல்லது 0422- 6611322/ 6611328/ 6611345 என்ற எண்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலைநாட்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X