தற்கொலை செய்த வழக்கில் தந்தைக்குஎதிராக ஆதாரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு: நான்கு பேர் தற்கொலை செய்த வழக்கில் தந்தைக்கு எதிராக ஆதாரங்களை, மகன் தன் லேப்டாப் கம்ப்யூட்டரில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெங்களூரு திகளர பாளையாவில் சில நாட்களுக்கு முன் ஒன்பது மாத குழந்தையை கொன்று, தாய், இரு மகள்கள், மகன் என நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக தற்கொலை செய்து கொண்ட மகள்கள் சிந்து ராணி, சிஞ்சனா, மகன் மதுசாகர் ஆகிய

பெங்களூரு: நான்கு பேர் தற்கொலை செய்த வழக்கில் தந்தைக்கு எதிராக ஆதாரங்களை, மகன் தன் லேப்டாப் கம்ப்யூட்டரில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு திகளர பாளையாவில் சில நாட்களுக்கு முன் ஒன்பது மாத குழந்தையை கொன்று, தாய், இரு மகள்கள், மகன் என நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக தற்கொலை செய்து கொண்ட மகள்கள் சிந்து ராணி, சிஞ்சனா, மகன் மதுசாகர் ஆகிய மூவரும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்திருந்தனர். மகன் எழுதிய கடிதத்தில், 'தந்தை வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

அவர் தொடர்பு வைத்திருந்தவரின் மகளையே திருமணம் செய்ய வற்புறுத்தினார்' என எழுதி இருந்தார். மகள்கள் எழுதிய கடிதத்தில், 'என் கணவர் வீட்டிலும் சந்தோஷம் இல்லை; தந்தை வீட்டிலும் நிம்மதி இல்லை' என, எழுதி இருந்தனர். கடிதத்தை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மகன் எழுதிய கடிதத்தில், 'நான் இறந்த பிறகும் நிம்மதியாக இருக்க விட மாட்டேன்; உங்களுக்கு பாடம் கற்பிப்பேன்; தந்தைக்கு எதிரான ஆதாரத்தை லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளேன். அவரது உண்மையான முகம் தெரிய வரும்' என எழுதி இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார், மது சாகரின் இரண்டு லேப் டாப்களை ஆய்வு செய்தனர். ஒன்றில், எந்த ஆதாரமும் இல்லை. மற்றொன்றில் தந்தை நான்கு பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்த ஆபாசமான வாசகங்கள், போட்டோக்கள் இருந்தன.இவ்வாறு 15 ஆதாரங்கள் இருந்தன.

இதை மதுசாகர் தந்தையின் மொபைல் போனில் இருந்து எடுத்து லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார். லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மதுசாகரின் தந்தை, பத்திரிகையாளர் சங்கர். அவரும் அந்த குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் தான் மிஞ்சியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X