''புதிய மணல் கொள்கையில் இலவச மணல் ?

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு:''புதிய மணல் கொள்கையில் இலவச மணல் கொடுப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் துறையை நிர்வகித்த அமைச்சர், ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை,'' என சுரங்கம், நில ஆய்வியல்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்தார். பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:புதிய மணல் கொள்கையில் இலவசமாக மணல் வழங்கும் அம்சம் இல்லை. எனக்கு முன், இத்துறையை நிர்வகித்த

பெங்களூரு:''புதிய மணல் கொள்கையில் இலவச மணல் கொடுப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன் துறையை நிர்வகித்த அமைச்சர், ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை,'' என சுரங்கம், நில ஆய்வியல்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்தார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:புதிய மணல் கொள்கையில் இலவசமாக மணல் வழங்கும் அம்சம் இல்லை. எனக்கு முன், இத்துறையை நிர்வகித்த அமைச்சர் முருகேஷ் நிரானி ஏன் அப்படி கூறினாரோ, எனக்கு தெரியவில்லை.மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 4.50 கோடி டன் மணல் தேவைப்படுகிறது. ஆனால் வெறும் 3.50 கோடி டன் கிடைகிறது. ஒரு கோடி டன் மணல், பற்றாக்குறை உள்ளது.

எம் - சாண்ட் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் அல்லது வேறு ஏதாவது மாற்று வழி தேட வேண்டும். புதிய மணல் கொள்கைக்கு, அமைச்சரவை இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மணல் கொள்கையை எளிமையாக செயல்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம்.

மத்திய அரசு, 'ஒன் ஸ்டாப் சென்டர்' துவங்கியுள்ளது. அதே இடங்களில் மாநிலத்தின் மகளிர் ஆறுதல் மையங்கள் இருந்தன. ஒரே இடத்தில், இரண்டு மையங்கள் இருந்ததால், மகளிர் ஆறுதல் மையங்கள் ரத்து செய்யப்பட்டது. இரண்டு மையங்களின் சேவையும் ஒன்று தான். மாண்டியாவில் சட்டவிரோத கல்குவாரி தொழில் நடக்கவில்லை.

மாவட்ட கமிட்டி, இடத்தை ஆய்வு செய்த பின்னரே தொழிலுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை செய்த மூத்த குடிமக்களுக்கு, பெங்களூரின் ரவீந்திர கலா சேத்ராவில், இன்று நடக்கவுள்ள மூத்த குடிமக்கள் தினம் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், நினைவு காணிக்கை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X