சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சயனைடு குப்பிகள் கடத்திய வழக்கில் விடுதலை புலிக்கு 2 ஆண்டுகள் சிறை

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமநாதபுரம்:சயனைடு குப்பிகள் கடத்திய வழக்கில் விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மறு சீரமைப்பு பணிக்காக அந்த அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக இலங்கைக்கு மிக அருகில் உள்ள ராமேஸ்வரம் கடல்மார்க்கமாக

ராமநாதபுரம்:சயனைடு குப்பிகள் கடத்திய வழக்கில் விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மறு சீரமைப்பு பணிக்காக அந்த அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக இலங்கைக்கு மிக அருகில் உள்ள ராமேஸ்வரம் கடல்மார்க்கமாக ஊடுருவல்கள், கடத்தல்கள் நடந்தன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பஸ்ஸ்டாப் அருகே 2015 ஜூலை 20ல் காரில் கடத்தப்பட்ட 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு கெமிக்கல், இந்திய, இலங்கை டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, இலங்கை பணம், 9 அலைபேசிகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இலங்கையை சேர்ந்த கிருஷ்ணகுமார் 44, பாஸ்கரன் 43, இவர்களுடன் இருந்த உச்சிப்புளி சசிகுமார் 33, மண்டபம் ராஜேந்திரன் 49, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த உதயகுமார் மற்றும் ஸ்ரீ தப்பினர்.இவ் வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.

2018 ஆக.24ல் நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.தப்பியோடிய உதயகுமாரை குமரி மாவட்டம் களியக்காவிளையில் 2017 ல் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கும் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

நேற்று விடுதலைப்புலி உதயகுமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். உதயகுமார் மீது ராமேஸ்வரம் போலீசில் கடத்தல் வழக்கு, முறைகேடாக இந்திய அரசின் பான்கார்டு பெற்றது, மதுரை உள்ளிட்ட இடங்களில் மேலும் நான்கு வழக்குகள் உள்ளதால் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
01-அக்-202113:26:07 IST Report Abuse
Swaminathan Chandramouli அந்த கூட்டத்தில் நமது விடுதலை சிறுத்தைகள் எவரும் பங்கு பெற வில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X