சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு கடன் ரூ.13 கோடி மோசடி வங்கி அதிகாரிக்கு மூன்றாண்டு சிறை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை:வீடு கட்ட கடன் வழங்கப்பட்டதில் மோசடி செய்த வங்கி அதிகாரிக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரன், 48, 'மாருதி பில்டர்ஸ்' என்ற பெயரில், கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். சம்பளப் பட்டியல்பல்வேறு நபர்களின் பெயரில், மொத்தமாக வீடு கட்டி கொடுப்பதற்கு, கடன் வழங்க கோரி, கவுண்டம்பாளையம் கனரா வங்கி கிளை மேலாளர் சண்முகம்

கோவை:வீடு கட்ட கடன் வழங்கப்பட்டதில் மோசடி செய்த வங்கி அதிகாரிக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரன், 48, 'மாருதி பில்டர்ஸ்' என்ற பெயரில், கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். சம்பளப் பட்டியல்பல்வேறு நபர்களின் பெயரில், மொத்தமாக வீடு கட்டி கொடுப்பதற்கு, கடன் வழங்க கோரி, கவுண்டம்பாளையம் கனரா வங்கி கிளை மேலாளர் சண்முகம் என்பவரை சந்தித்தார்.

தங்க நகை தொழிலாளர்கள் 50 பேரின் பெயரில், சம்பளப் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்தார். வங்கி மேலாளர் சண்முகம், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த குமரன் பெயரில், மொத்தமாக 13 கோடி ரூபாய் கடன் வழங்கினார். 2001 - 2005 ஆண்டு வரையில் கடன் தொகை வழங்கப்பட்டது.

ஆனால், கடன் பெற்று பல ஆண்டுகளாகியும் தவணை தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, போலி சம்பள பட்டியல் மற்றும் போலியான வீட்டு மனை ஆவணங்களை கொடுத்து, கடன் பெற்று மோசடி செய்ததும், இதற்கு வங்கி அதிகாரி சண்முகம் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

இது தொடர்பாக, வங்கி அதிகாரி சண்முகம், 65, குமரன் மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர் சித்ரகனி, 55, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அபராதம்இவர்கள் மீது, கோவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் 2009ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், தலா மூன்றாண்டு சிறைத் தண்டனை, 6.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X