பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 3ல் காஞ்சியில் கண் மருத்துவ முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், அக்., 3ல், நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் மங்களாம்பிகா கேட்டரிங் சர்வீஸ், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், அக்., 3ல், நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் மங்களாம்பிகா கேட்டரிங் சர்வீஸ், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி திருமண மண்டபத்தில், வரும், அக்., 3ல், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.அன்று காலை, 10:00 மணிக்கு காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்கத்தின் தலைவர் பரணிதரன், மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.முகாமில், கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 94442 73838 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X