பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி பஸ், வேன்களை, ஆய்வு செய்த அதிகாரிகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தனியார் பள்ளி பஸ், வேன்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நவ., 1ம் தேதி, திறக்கப்படுகிறது.இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஏற்றிவரும் பஸ் மற்றும் வேன்களை, வருவாய் கோட்டாட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., மாவட்ட கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தனியார் பள்ளி பஸ், வேன்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், நவ., 1ம் தேதி, திறக்கப்படுகிறது.இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஏற்றிவரும் பஸ் மற்றும் வேன்களை, வருவாய் கோட்டாட்சியர், போலீஸ் டி.எஸ்.பி., மாவட்ட கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உடைய குழுவினர், ஆய்வு செய்து வருகின்றனர்.செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி, செங்கல்பட்டு ஐ.டி.ஐ., வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.வருவாய் கோட்டாட்சியர் சாகிதாபர்வீன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோர், பஸ் மற்றும் வேன்களில் தரம், செயல்திறன் பாதுகாப்பு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனங்களில் ஜி.பி.எஸ்., கேமரா உள்ளிட்டவை உள்ளதா என, ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, 45 வாகனங்கள் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X