அனுமதி பெறாமல் சுவரொட்டி :வேட்பாளர்கள் அடாவடி!

Added : அக் 01, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வாகன அனுமதி மற்றும் சுவரொட்டி விளம்பரங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெறாமல் தெனாவட்டாக நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்-., 6, 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுங்கட்சியாக இருக்கும், தி.மு.க.,



காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வாகன அனுமதி மற்றும் சுவரொட்டி விளம்பரங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெறாமல் தெனாவட்டாக நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அக்-., 6, 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுங்கட்சியாக இருக்கும், தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., உட்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன. வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் பிரசாரத்திற்கு பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பான வரையறைகளை, மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.அதன்படி, அரசுக்கு சொந்தமான மற்றும் பொது இடங்களில், சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், தனியார் இடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும்,சுவரில் விளம்பரம் எழுதுவதோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.அனுமதி இல்லை தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை, உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டிஇடும் வேட்பாளர்கள் மீறி வருகின்றனர்.திருப்புலிவனம், குண்ணவாக்கம், மருத்துவான்பாடி, சித்தமல்லி, வாடாதவூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.அதேபோல் பிரசாரத்திற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்களுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி நகலை, வாகனத்தின் முன் ஒட்டி வைக்க வேண்டும்.களம்ஆனால் கட்சிகளின் வேட்பாளர்கள் அவ்வாறு பெறாமல், கிடைக்கும் வாகனங்களில் வந்து பிரசாரம் செய்கின்றனர்.இதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய தேர்தல் அதிகாரிகள் துாங்கி வழிகின்றனர். எதிர்தரப்பு வேட்பாளர்கள் புகார் அளித்தால், கடமைக்கு நடவடிக்கை எடுக்கின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில் அய்யன்பேட்டை அரசு கால்நடை மருத்துவ கட்டடம், ஏனாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி பழைய கட்டடம் உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.களியனுார் கிராமத்தில் குப்பை கொட்டும் தொட்டியைகூட விட்டு வைக்க வில்லை என, சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. அங்குள்ள மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராகுல்நாத், இதை கண்டுகொள்வதில்லை.திருப்போரூர் ஒன்றிய வார்டுகளில் வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்பதவிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வரையும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த சின்னங்களை சுவர்களில் வரையும் பணியில் ஓவியர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். - நமது நிருபர்கள் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X