கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருட்டு வழக்கில் மகன் கைது :விரக்தியில் முதியவர் தற்கொலை

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:மகன் மற்றும் மருமகள் திருட்டு வழக்கில் கைதான விரக்தியில், முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் மாவட்டம் மருவத்துார் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து, கடந்த 28ம் தேதி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்த புகார்படி, செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி,

பெரம்பலுார்:மகன் மற்றும் மருமகள் திருட்டு வழக்கில் கைதான விரக்தியில், முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்டம் மருவத்துார் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து, கடந்த 28ம் தேதி நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்த புகார்படி, செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி, லட்சுமி தம்பதியை கைது செய்து, அவர்களிடம் இருந்த திருட்டு போன நகை, பணத்தை மீட்டு சிறையில் அடைத்தனர்.

இதையறிந்த பழனிசாமியின் தந்தை ரெங்கசாமி, 70. தன் மூத்த மருமகள் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் நிலையில், இளைய மருமகள் மற்றும் இளைய மகன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று காலை அங்குள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X