பொது செய்தி

தமிழ்நாடு

கோதவாடி குளத்துக்கு உயிர் தண்ணீர் அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, குருநல்லிபாளையம் ஊராட்சியில், கோதவாடி குளம் அமைந்துள்ளது, 250 ஏக்கர் பரப்பளவிலான குளத்தில், கடந்த, 25 ஆண்டுகளாக தண்ணீர் தேங்கவில்லை.விவசாயிகள், கிராம மக்கள் வேண்டுகோளின்படி, இதுவரை, மூன்று முறை குளத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதன்பின், மழையால் கோதவாடி குளம் நிரம்பி வழிந்தது.இந்நிலையில், கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, குருநல்லிபாளையம் ஊராட்சியில், கோதவாடி குளம் அமைந்துள்ளது, 250 ஏக்கர் பரப்பளவிலான குளத்தில், கடந்த, 25 ஆண்டுகளாக தண்ணீர் தேங்கவில்லை.

விவசாயிகள், கிராம மக்கள் வேண்டுகோளின்படி, இதுவரை, மூன்று முறை குளத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதன்பின், மழையால் கோதவாடி குளம் நிரம்பி வழிந்தது.இந்நிலையில், கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் கோதவாடி குளத்து நீரை நம்பியுள்ள விவசாயிகள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பி.ஏ.பி., பாசன கால்வாயில், வடசித்துார் கிளையின் எல்லையில் இருந்து, இயற்கை நீர் வழிப்பாாதை கோதவாடி குளம் வரை அமைந்துள்ளது. இதன் வழியாக, பி.ஏ.பி., நீரை குளத்துக்கு கொண்டு வர முடியும்.பி.ஏ.பி., நீரை பயிர் சாகுபடிக்கு கேட்கவில்லை. மாறாக, கிராம மக்களின் குடிநீருக்காகவும், குளத்தை சுற்றுயுள்ள பல்லுயிர்கள் பயனடையவும், பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிணத்துக்கடவு பகுதியின் வறட்சியை போக்கி, பசுமை சூழலை உருவாக்கவே குளத்துக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

பி.ஏ.பி., திட்டத்தின் இரண்டு கிளை கால்வாய்கள் குளத்துக்கு மிக அருகிலேயே செல்கின்றன. இருப்பினும், 250 ஏக்கர் பரப்பளவிலான கோதவாடி குளம் வறண்டு காட்சி அளிக்கிறது. அரசும், அதிகாரிகளும் கோதவாடி குளத்துக்கு உயிர் நீர் கொண்டு வர உதவ வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X