பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை... நாணயம்...

Added : அக் 01, 2021
Share
Advertisement
தேர்தல் நெருங்குவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். போட்டியிடும் பதவியை பிடிக்க, ஆளாய் பறக்கின்றனர்.காலையில் 8:00 மணியில் துவங்கி இரவு 9:00 மணி வரை, தன் ஆதரவாளர்களோடு வீதி வீதியாக சென்று, ஓட்டு சேகரிக்கின்றனர்.வேட்பாளர்கள், தனக்கு ஓட்டு அளிப்பது யார், ஓட்டளிக்க விரும்பாதவர் யார் என, தங்கள் ஆதரவாளர்களை வைத்து ஒரு பட்டியல் தயார் செய்து வருகின்றனர். அந்த

தேர்தல் நெருங்குவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். போட்டியிடும் பதவியை பிடிக்க, ஆளாய் பறக்கின்றனர்.காலையில் 8:00 மணியில் துவங்கி இரவு 9:00 மணி வரை, தன் ஆதரவாளர்களோடு வீதி வீதியாக சென்று, ஓட்டு சேகரிக்கின்றனர்.வேட்பாளர்கள், தனக்கு ஓட்டு அளிப்பது யார், ஓட்டளிக்க விரும்பாதவர் யார் என, தங்கள் ஆதரவாளர்களை வைத்து ஒரு பட்டியல் தயார் செய்து வருகின்றனர். அந்த பட்டியலில் இருப்போரை தம் பக்கம் இழுக்க, ஆதரவாளர்களுடன் சென்று நைசாக பேசி வருகின்றனர்.பின் ஆதரவாளர்களை வீட்டுக்கு அனுப்பி, இரவு 9:00 மணிக்கு மேல், தன்னந்தனியாக ஓட்டளிக்க விரும்பாதவரின் வீட்டு கதவை தட்டி, குடும்பத்தில் இருப்போரிடம் பேசி வருகின்றனர்.வீட்டில் பிள்ளைகள் இருந்தால்'என்ன படிக்கிறாய்... எப்படி படிக்கிறாய்' என விசாரித்தபடியே, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, 'பழைய சண்டைலாம் மனசுல வைச்சிக்காதீங்க. உங்களுக்கு ஒரு பிரச்னைனா நான் முன்னவந்து நிப்பேன். எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்' என நம்பிக்கையூட்டும் விதமாக பேசி வருகின்றனர்.கைகளை இறுக்கமாக பிடித்து பேசி செல்வதால், உணர்ச்சி பெருக்கில் குடும்பத்தினரும், 'பழசைலாம் மறந்துட்டு, தனியாள வந்து அக்கறையா பேசுறாரு. இவருக்கே ஓட்டு போடலாம்' என அவர்களுக்குள் பேசி வருகின்றனர்.கூட்டத்தோடு கூட்டமாய் சென்று ஓட்டு கேட்பதைவிட, இம்மாதிரியான அணுகுமுறை கை கொடுக்கும் என, ஊராட்சி தலைர் வேட்பாளர்கள் நம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X