பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் எண்ணெய் மறுபயன்பாடு கூடாது! உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுரை

Added : அக் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : 'உணவங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மறுபடியும் பயன்படுத்தக் கூடாது,' என, உணவு பாதுகாப்பு துறை நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை

பொள்ளாச்சி : 'உணவங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மறுபடியும் பயன்படுத்தக் கூடாது,' என, உணவு பாதுகாப்பு துறை நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.பொள்ளாச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி, காளிமுத்து ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.கூட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து, பொள்ளாச்சி வட்டார ஓட்டல்கள், கேட்டரிங் உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், இனிப்பு, கார விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நியமன அலுவலர் பேசியதாவது:கடைகளில் அரசு உத்தரவுப்படி, கொரோனா பரவல் தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உணவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், கட்டாயமாக இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.நிறுவனங்களை விதிகளின்படி பதிவு செய்திருக்க வேண்டும், உணவு சார்ந்த அனைத்து நிறுவனங்களும் தர நிர்ணய சோதனை செய்து, சான்று பெற வேண்டும்.

உணவுப்பொருட்கள் தயாரிப்பில், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மறுபடியும் பயன்படுத்துவதால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனால், எண்ணெய் மறு உபயோகம் கூடாது.'குறைந்த உப்பு, குறைந்த இனிப்பு, குறைந்த கொழுப்பு, குறைந்த எண்ணெய்' என்ற உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் நடைமுறையை பயன்படுத்தி, உணவு தயாரிக்க வேண்டும்.

மேலும், உணவகங்களில் அதிகமாக தயாரிக்கப்பட்டு விற்பனையாகாத, உண்ணத்தகுந்த உணவுகளை வீணாக வெளியில் கொட்டாமல், ஏழைகளுக்கு வழங்கும் வகையில், தன்னார்வ நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். தன்னார்வலர்களை, 90877 90877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X