பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்கள் கூட்டத்தில்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சலவை தொழிலாளி ராணி என்பவர் போட்டியிடுகிறார்.இப்பகுதி தி.மு.க., பிரமுகரின் ஆதரவில் இவர் நிறுத்தப்பட்டுள்ளார்; தேர்தல் செலவுகளையும் அவரே பார்த்து கொள்கிறார்.காரணம், தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரின் கணவருக்கும், பிரமுகருக்கும் ஏற்கனவே 'டிஷ்யூம்' இருக்கிறது. இதனால் கட்சி தலைமை

திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சலவை தொழிலாளி ராணி என்பவர் போட்டியிடுகிறார்.
இப்பகுதி தி.மு.க., பிரமுகரின் ஆதரவில் இவர் நிறுத்தப்பட்டுள்ளார்; தேர்தல் செலவுகளையும் அவரே பார்த்து கொள்கிறார்.காரணம், தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரின் கணவருக்கும், பிரமுகருக்கும் ஏற்கனவே 'டிஷ்யூம்' இருக்கிறது. இதனால் கட்சி தலைமை நிர்வாகிகளின் பேச்சை மீறி, ராணியை போட்டியிட வைத்துள்ளார்.தி.மு.க.,வின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக, இவ்விரு கோஷ்டியினரும் தகராறு ஏற்பட்டு வருகிறது.இதனால் தேர்தல் பிரசாரத்தில், ராணி தனியாக சென்றால் எதிர் தரப்பினரால் தாக்கப்படலாம் என்பதால், கறுப்பு உடையணிந்த பாதுகாப்பு இளைஞர்களை, அவருக்கு பாதுகாப்பாக, பிரமுகர் அனுப்பி வைக்கிறார். இளைஞர்கள் படை சூழ ராணி சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X