தமிழ்நாடு

கூண்டோட அள்ளணுங்குறாரு அமைச்சரு

Added : அக் 01, 2021
Share
Advertisement
தேர்தல் பிரசாரம் களைகட்டுவதால், வாக்காளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கூட்டத்திற்கு சென்றால் பணம், பிரியாணி, சரக்கு என மிதப்பில் இருக்கின்றனர்.தி.மு.க., சார்பில், செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துாரில் நேற்று நடந்த பிரசாரத்திற்கு, பிற்பகல் வந்த கூட்டத்தினர், அமைச்சர் அன்பரசன் பேசியதை கேட்டனர்.அவர் பேசியதாவது:அனைத்து இடங்களும் நம் இலக்கு; கட்சியினர் தீவிர

தேர்தல் பிரசாரம் களைகட்டுவதால், வாக்காளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கூட்டத்திற்கு சென்றால் பணம், பிரியாணி, சரக்கு என மிதப்பில் இருக்கின்றனர்.தி.மு.க., சார்பில், செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துாரில் நேற்று நடந்த பிரசாரத்திற்கு, பிற்பகல் வந்த கூட்டத்தினர், அமைச்சர் அன்பரசன் பேசியதை கேட்டனர்.அவர் பேசியதாவது:அனைத்து இடங்களும் நம் இலக்கு; கட்சியினர் தீவிர பிரசாரம்செய்து, எதிர்த்து போட்டியிடுவோரை, 'டிபாசிட்' இழக்க வைக்க வேண்டும். பொன்விளைந்தகளத்துார் ரயில்வே மேம்பால பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எத்தகைய தொழிற்சாலையாக இருந்தாலும், இனி 20 சதவீத வேலைவாய்ப்பை, உள்ளூர் பகுதியினருக்கே வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க.,வை விமர்சித்தவர்களும் நம் ஆட்சியை தற்போது பாராட்டுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள், உறவினராக இருந்தாலும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.'தி.மு.க.,வில் 'சீட்' கிடைக்காதோர் உள்ளடியில் ஈடுபடாமல் இருந்தால், மற்ற நிர்வாக சங்கங்களில் சிறப்பான இடம் வழங்கப்படும்' என பிரசாரத்தில் அமைச்சர் கூறினாரே... நீ கேட்டியா கருப்பு' என வெள்ளை கூறவும், 'அட ஆமாம்ணே... அதைவிட ம.நீ.ம., கமல் சொன்னத கேட்டீங்களா' என கருப்பு ஆரம்பித்தார்.இதை கேளுங்க:செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி வேட்பாளர்களுக்காக வந்துள்ளேன். ஊரப்பாக்கம் வந்தவுடன் குப்பை நாற்றம் வீசுகிறது.இந்த நாற்றத்தை இங்குள்ள மக்கள் பழகிவிட்டனர். இது போன்ற பிரச்னைகள், தமிழகத்தில் அரை நுாற்றாண்டுகளாக உள்ளன.அதை யாரும் மாற்றியதாக சரித்திரம் இல்லை. அனைத்தையும் மாற்றிவிட்டோம், வானத்தை வில்லாக வளைத்து விட்டோம் என சொல்கின்றனர்.உங்கள் ஊருக்கும், தெருவுக்கும், வீட்டிற்கும், வாசலுக்கும் சாக்கடை நீர் வராமல் இருப்பதற்கான சாவி வைத்தியம் அனைத்தும், உங்கள் கைகளில் தான் உள்ளது. அதை மாற்ற ம.நீ.ம., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.'இப்படி கூறியதுக்கு அப்புறம் அவரால நிம்மதியா போக முடியல' என கருப்பு கூறவும், 'ஏன்' என்றார் வெள்ளை.'சாயங்காலம் 6:05 மணிக்கு வந்த ஆண்டவரு, அதிகளவில் கூட்டம் இல்லாததால் 6:16 மணிக்கு பேச்சை முடித்து சென்றது தான்' என கருப்பு பேச்சை முடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X