சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் நெல் கொள்முதல்: அரசு முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கம்பம்:ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விவசாயிகள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் ஆண்டுதோறும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்தாண்டு நெல் கொள்முதலில் புதிய நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

கம்பம்:ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு விவசாயிகள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் ஆண்டுதோறும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்தாண்டு நெல் கொள்முதலில் புதிய நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதில் நில பட்டா, சர்வே எண்கள், பரப்பு, மகசூல், அறுவடை தேதி விபரங்கள் பதிவேற்ற வேண்டும்.

அந்த பதிவு உரிய வி.ஏ.ஓ.,க்களுக்கு செல்லும். அவர்கள் சம்பந்தப்பட்டவர் விவசாயிதானா, நிலம் அவருடையதா, அறுவடை உண்மை தானா என உறுதி செய்து பரிந்துரைப்பார். அதன்பின் விவசாயிக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் ஒதுக்கப்படும் தேதி, நேரம் அடிப்படையில் அருகில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு சென்று விற்கலாம்.இது தொடர்பாக வி.ஏ.ஓ.,க்கள், வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனால் வி.ஏ.ஓ.க்கள், விவசாயிகள் புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் நிலங்களை பெரும்பாலும் குத்தகை, ஒத்திக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் பெயருக்கும் பட்டாவில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் வரும். அப்போது கொள்முதல் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்படும். அறுவடை செய்த நெல்லை இருப்பு வைக்க இடவசதி இருக்காது. எனவே புதிய நடைமுறையை அரசு திரும்ப பெற்று பழைய முறையிலேயே நெல் ஈரப்பதம் மட்டும் பார்த்து ஆவணங்கள் இன்றி விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதை தொடர வேண்டும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.


பாதிக்கும்

சின்னமனுார் விவசாயி ஆர். சரவணன் கூறுகையில் ,'' அனைவரும் ஒரே சமயத்தில் அறுவடை செய்கின்றனர். வி.ஏ.ஓ. ஆவணங்களை சரிபார்த்து பரிந்துரை செய்து வாணிப கழக அதிகாரிகளிடம் டோக்கன் பெற காலதாமதம் ஏற்படும். நில உரிமையாளர்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டுள்ளனர். நிலப்பட்டாவில் உள்ள பெயரும் குத்தகைதாரர்கள் பெயரும் வேறுபடும் போது அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இடைத்தரகர்களை தடுக்கும் புதிய அறிவிப்பு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். பழைய நடை முறையே தொடர வேண்டும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X