பொது செய்தி

தமிழ்நாடு

வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு; ஊட்டச்சத்து 'கிட்' வழங்கல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
உடுமலை : பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் 'போஷான் அபியான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலை ஒன்றியம், எலையமுத்துார், அமராவதி மற்றும் ஜல்லிபட்டி அரசு பள்ளிகளில், வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த விழாவுக்கு,

உடுமலை : பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் 'போஷான் அபியான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உடுமலை ஒன்றியம், எலையமுத்துார், அமராவதி மற்றும் ஜல்லிபட்டி அரசு பள்ளிகளில், வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த விழாவுக்கு, தலைமையாசிரியர் திலகாம்பாள், தலைமை வகித்தார்.ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

சிறுதானியங்கள் மற்றும் இணை உணவில் செய்த ஊட்டச்சத்து உணவு வகைகள், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன; 250 வளரிளம் பெண்களுக்கு, ஊட்டச்சத்து உணவுப்பொருட்களை உள்ளடக்கிய 'கிட்' மற்றும் நலக்குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், தன்னார்வலர் நிவேதா, ஐ.சி.டி.எஸ்., மேற்பார்வையாளர் திலகம், செவிலியர்கள் கீதா, சரண்யா, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தியபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா கூறுகையில், ''வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், அங்கன்வாடி மையங்களின் வாயிலாக, அவ்வபோது, எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு, தங்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X