வாடகை செலுத்தாத 183 கடைகள்; அக்., 8 வரை அவகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை செலுத்தாத 183 கடைகள்; அக்., 8 வரை அவகாசம்

Added : அக் 01, 2021
Share
ஊட்டி : நகராட்சிக்கு நிலுவை வாடகை செலுத்தாத, 183 கடைகளுக்கு அக்., 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.ஊட்டி, நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கடந்த, 2016ம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டது. புதிய வாடகை தொகையை வியாபாரிகள் செலுத்தாக காரணத்தல், பாக்கி 38 கோடி ரூபாயை எட்டியது. இதையடுத்து, ஆக., 25 ம் தேதி

ஊட்டி : நகராட்சிக்கு நிலுவை வாடகை செலுத்தாத, 183 கடைகளுக்கு அக்., 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊட்டி, நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கடந்த, 2016ம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டது. புதிய வாடகை தொகையை வியாபாரிகள் செலுத்தாக காரணத்தல், பாக்கி 38 கோடி ரூபாயை எட்டியது. இதையடுத்து, ஆக., 25 ம் தேதி மார்க்கெட் மற்றும் பிற கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.

ஏலம் விட நடவடிக்கை

நகராட்சி கமிஷனர் சரஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில், ''ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு நிலுவை வாடகை செலுத்தாத, கடை உரிமையாளர்கள் பலர், 25 முதல் 75 சதவீதம் வாடகை செலுத்தி உள்ளனர். மீதி தொகையை தவணை அடிப்படையில் செலுத்துவதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்ததால் அந்த கடைகள் திறக்கப்பட்டது. அதன் மூலம், நகராட்சிக்கு, 13.35 கோடி ரூபாய் வசூலானது. இதில், 183 கடைகள் ஒரு மாதம் கடந்தும் நிலுவை வாடகை செலுத்தவில்லை. இந்த கடைகளுக்கு வரும், அக்., 8 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின், கடைகள் ஏலம் விடப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X