சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரி மரணத்தில் மர்மம்; மறு பிரேத பரிசோதனைக்கு மனு

Added : அக் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி : 'சகோதரி மரணத்தில் மர்மம் இருப்பதால், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்,' என, எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர், எஸ்.பி., ஆசிஷ் ராவத்திடம் அளித்துள்ள மனு:துாத்துக்குடியில் குடியிருந்து ஓட்டல் தொழில் செய்து வருகிறேன். எனது மூன்றாவது சகோதரி வனிதாவை,33, கூடலுார் அருகே புழம்பட்டி, செறுமுள்ளியை சேர்ந்த கண்ணனுக்கு

ஊட்டி : 'சகோதரி மரணத்தில் மர்மம் இருப்பதால், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்,' என, எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர், எஸ்.பி., ஆசிஷ் ராவத்திடம் அளித்துள்ள மனு:துாத்துக்குடியில் குடியிருந்து ஓட்டல் தொழில் செய்து வருகிறேன். எனது மூன்றாவது சகோதரி வனிதாவை,33, கூடலுார் அருகே புழம்பட்டி, செறுமுள்ளியை சேர்ந்த கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தோம். 6,4,2 வயதில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். சகோதரியை சந்தேகப்பட்டு கணவர் கண்ணன், கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், 'கடந்த செப்., 16 ம் தேதி எனது சகோதரி கொலை செய்யப்பட்டார்,' என, அருகில் வசிப்பவர்கள் எனக்கு போன் மூலம் தகவல் கூறினர். மறு நாள் கூடலுார் வந்து உடலை பார்த்த போது ஆங்காங்கே காயங்கள் இருந்தது. வனிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூடலுார் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உடலை மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ராமநாதன் கூறியுள்ளார். மனு மீது உரிய விசாரணை நடத்த கோரி எஸ்.பி., உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
01-அக்-202114:46:05 IST Report Abuse
JeevaKiran மரணத்தில் மர்மம் இருப்பதாக கூடலுார் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போ முதலில் இந்த போலீசார் மீதுதான் நடவடிக்கை எடுக்கணும். பெரும்பாலான குற்றங்கள் இதுபோல் போலிசாரின் மெத்தனத்தால் (பணம் வாங்கிக்கொண்டு) மறைக்கப்படுகின்றன / குற்றவாளிகள் தப்பிக்க படுகிறார்கள் என்பதுதான் நிஜம். இதை போலீசாரும் நன்கு உணர்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X