சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் 'பார்' ஏலம் எடுப்பதில் தகராறு; ஆள் கடத்தி, பணம் பறித்த 5 பேர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : டாஸ்மாக் 'பார்' ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆள் கடத்தி பணம் பறித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் சதீஷ்குமார், 46, என்பவர், திப்பம்பட்டி டாஸ்மாக் 'பார்' ஏலம் எடுத்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு

பொள்ளாச்சி : டாஸ்மாக் 'பார்' ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆள் கடத்தி பணம் பறித்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் சதீஷ்குமார், 46, என்பவர், திப்பம்பட்டி டாஸ்மாக் 'பார்' ஏலம் எடுத்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.இந்நிலையில், கொரோனா பரவலால், 'பார்'கள் மூடப்பட்டதால், ராஜா வருவாய் இழந்தார். தற்போது, மீண்டும் டாஸ்மாக் 'பார்'கள் ஏலம் விடப்பட இருப்பதாக அறிந்த ராஜா, நண்பர்களுடன் பொள்ளாச்சி வந்தார்.

சதீஷ்குமாரை சந்தித்து, நல்ல வருவாயுள்ள 'பார்' ஆக எடுத்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, ராஜா வந்த இனோவா காரில், சதீஷ்குமார் மற்றும் ராஜாவின் நண்பர்கள் நான்கு பேர் கோவை ரோட்டில் சென்றுள்ளனர்.அப்போது, 'பார்' எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆச்சிபட்டி அருகே ராஜா மற்றும் நண்பர்கள், சதீஷ்குமாரை அரிவாளால் தாக்கி, அவரிடம் இருந்த, ஒரு லட்சத்து, நான்காயிரத்து, 300 ரூபாய் பணம் மற்றும் கால் பவுன் மோதிரத்தை பறித்து கொண்டு காரில் தப்பினர்.

சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார், தில்லைநகர் அருகே காரில் வந்த ராஜா மற்றும் குழுவினரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 88 ஆயிரம் ரூபாய் மற்றும் மோதிரத்தை மீட்டு, காரை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவத்தில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 30; கருப்புசாமி, 35; கண்ணன், 39; சிவக்குமார், 25 மற்றும் ஈஸ்வரன், 36 ஆகியோர், ஆள் கடத்தல், ஆயுதத்தால் தாக்கி கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X