போலீஸ் செய்திகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
விபத்தில் 15 பேர் காயம் உடுமலை பூளவாடியிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு, நேற்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆட்களை, வேனில் அழைத்து சென்றுள்ளனர்.இந்த வேன், பூளவாடி மேட்டுச்சாலை பகுதியில், சென்ற போது, அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி செல்ல நின்றிருந்த அரசு பஸ் எண், 8ஏ பின்புறம், வேகமாக மோதியது.இதில், வேனில், பயணித்த, அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், மஞ்சுளாதேவி,

விபத்தில் 15 பேர் காயம்

உடுமலை பூளவாடியிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு, நேற்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து, ஆட்களை, வேனில் அழைத்து சென்றுள்ளனர்.இந்த வேன், பூளவாடி மேட்டுச்சாலை பகுதியில், சென்ற போது, அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி செல்ல நின்றிருந்த அரசு பஸ் எண், 8ஏ பின்புறம், வேகமாக மோதியது.இதில், வேனில், பயணித்த, அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், மஞ்சுளாதேவி, கவுசல்யா உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். வேனின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. காயம்பட்டவர்களை, உடுமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குடிமங்கலம் போலீசார், அதிவேகமாக, வேனை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, டிரைவர் கோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக வேனை ஒட்டிய டிரைவரால், விபத்து ஏற்பட்டு, 15 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

முதியவர் மர்ம மரணம்

உடுமலை அருகே பெதப்பம்பட்டி உப்பாறு ஓடை பாலம் அருகே, நேற்று மாலை ரோட்டோரத்தில் ஒரு பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக, குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பார்த்த போது, தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பைக் அருகிலேயே முதியவர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தீக்காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர் விசாரணையில், அந்நபர், தாராபுரம் பெரியகடை வீதியை சேர்ந்த முனுசாமி, 60 என்பதும், பொள்ளாச்சியிலுள்ள மகளை பார்ப்பதற்காக, பைக்கில் வந்ததும்,தெரியவந்தது. முதியவர் இறந்தது மற்றும் பைக் தீப்பிடித்தற்கான காரணம் குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

பொள்ளாச்சியை சேர்ந்த முருகேசன், 61, வாகனங்களுக்கு பெயின்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர், நேற்று காலை, 8:20 மணிக்கு, சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், மாக்கினாம்பட்டி அருகே அடிபட்டு இறந்தார்.தகவல் அறிந்து, பிரேதத்தை மீட்ட பழநி ரயில்வே போலீசார், முருகேசன் தற்கொலை செய்து கொண்டாரா, தற்செயலாக அடிபட்டு இறந்தாரா, என விசாரிக்கின்றனர்.

லாரிகளில் 'ஓவர் லோடு'

கிணத்துக்கடவு பகுதியில், கருங்கல், ஜல்லிக்கற்கள் கூடுதல் பாரத்துடன், லாரிகள் வெளியூர் செல்வது அதிகரித்துள்ளது. நேற்று, காரச்சேரி பகுதியில், ஜல்லிக்கற்கள் கூடுதல் பாரம் ஏற்றி சென்ற இரு லாரிகள் பிடிபட்டன.அனுமதிக்கப்பட்ட பாரத்தை காட்டிலும் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, லாரிகள் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன. இரண்டு லாரிகளுக்கும் மொத்தமாக, 56 ஆயிரத்து, 750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X