கூவம் ஆற்று தடுப்பணை ரூ.29 கோடியில் சீரமைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம் :புதுச்சத்திரம் பகுதியில், கூவம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணை 29 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது புதுச்சத்திரம் ஊராட்சி. இப்பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தடுப்பணை, 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்ததால் 2016ல் அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.பின், 2020ம் ஆண்டு, ஜூலை

புதுச்சத்திரம் :புதுச்சத்திரம் பகுதியில், கூவம் ஆற்றில் சேதமடைந்த தடுப்பணை 29 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது புதுச்சத்திரம் ஊராட்சி. இப்பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தடுப்பணை, 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்ததால் 2016ல் அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.பின், 2020ம் ஆண்டு, ஜூலை மாதம், நபார்டு திட்டத்தில் சீரமைக்க உத்தரவிடப்பட்டு, 2021ம் ஆண்டு, ஜனவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டன.இதையடுத்து, பொதுப்பணித் துறையினர் இப்பகுதியில் 29 கோடி ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்தில் தடுப்பணையும், இருபுறமும் தலா 15 மீட்டர் நீளத்தில் கதவணையும் சேர்ந்து மொத்தம் 140 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த தடுப்பணை வரும் மழைக்காலத்தில் பயன்பெறும் வகையில் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தடுப்பணையில், 0.03 டி.எம்.சி., நீர் சேமித்து வைக்கப்படும். இந்த நீர் சேமிப்பின் மூலம், புதிய பங்காரு கால்வாய் மூலம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 3,360 கன அடி நீர் செல்லும் என கூறினர்.மேலும், இந்த தடுப்பணையின் முன்புறம் ஆறு மீட்டர் உயரம் மற்றும் ஒரு கி.மீட்டர் நீளத்திலும், தடுப்பணையின் பின்புறம் 4.5 மீட்டர் உயரத்திற்கு 500 மீட்டர் நீளத்திலும், கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X