சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பராமரிக்காத மகனிடமிருந்து மீட்டசொத்து பெற்றோரிடம் ஒப்படைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் வழங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த சவுகத் அலி 70, மனைவி சுபுகானிபேகம் 65, இவர்களிடமிருந்து சொத்துக்களை பெற்று கொண்டு பராமரிக்காமல் கைவிட்ட 2வது மகன் பைசல்கானிடமிருந்து சொத்தை மீட்டுத்தரக்கோரி அவர்கள் கலெக்டர்
 பராமரிக்காத மகனிடமிருந்து மீட்டசொத்து பெற்றோரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் வழங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.

ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த சவுகத் அலி 70, மனைவி சுபுகானிபேகம் 65, இவர்களிடமிருந்து சொத்துக்களை பெற்று கொண்டு பராமரிக்காமல் கைவிட்ட 2வது மகன் பைசல்கானிடமிருந்து சொத்தை மீட்டுத்தரக்கோரி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தார்.

வருவாய்துறையினர், சமூகநலஅலுவலகத்துறையினர் விசாரணை செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்தனர். இதன் அடிப்படையில் மகனுக்கு எழுதி கொடுத்த இனாம்செட்டில்மென்ட் ஆவணம் செல்லத்தகுந்த ஆவணமாக கருத இயலாது, என ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து சவுகத்அலி, சுபுகானிபேகம் ஆகியோரிடம் சொத்து மீட்பு உத்தரவு ஆணையை கலெக்டர் சந்திரகலா வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X