பொது செய்தி

தமிழ்நாடு

தேக்கடி ஏரியில் யானைகள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
கூடலுார்:தேக்கடி ஏரிக்கரையில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரைப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் சுற்றுலாப் பயணிகளுக்கு
 தேக்கடி ஏரியில் யானைகள்  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கூடலுார்:தேக்கடி ஏரிக்கரையில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரைப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்தம்.கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் இருந்தபோதிலும், சுற்றுலாத்தலமான தேக்கடியில் கட்டுப்பாடுகளுடன் படகு சவாரி செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதற்காக காலை 7:00 மணி, 11:00 மணி, பகல் 1:00 மணி, 3:00 மணி ஆகிய நேரங்களில் 5 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது ஏரியின் கரைப் பகுதியில் யானைகள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். காலையில் 7:00 மணி ட்ரிப்பில் அதிகமாக வனவிலங்குகள் நடமாடுவதால் அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X