வருவாய் துறையினர் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் துறையினர் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 01, 2021
Share
பொன்னேரி :தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலர் மணிகண்டன் தலைமையில், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது, கொரோனா தடுப்பு பணியின்போது இறந்த அலுவலர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.மாவட்ட வருவாய் அலுவலர், துணை

பொன்னேரி :தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலர் மணிகண்டன் தலைமையில், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது, கொரோனா தடுப்பு பணியின்போது இறந்த அலுவலர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும், சட்டசபை தேர்தல் நடத்தியதற்கான நிதியை முழுமையாக வழங்க வேண்டும்; அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நவம்பர் மாதம் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X