'குடி'மகன்களால் இடையூறு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பொன்னேரி ; மெதுார் கிராமத்தில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள், அரசு அலுவலகங்களின் அருகில் 'குடி'மகன்கள் குடித்துவிட்டு இடையூறு ஏற்படுத்தி வருவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில், கோளூர் செல்லும் சாலையில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கடை இருக்கும் இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில்

பொன்னேரி ; மெதுார் கிராமத்தில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள், அரசு அலுவலகங்களின் அருகில் 'குடி'மகன்கள் குடித்துவிட்டு இடையூறு ஏற்படுத்தி வருவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில், கோளூர் செல்லும் சாலையில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கடை இருக்கும் இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தாலும், மதுபானங்களை வாங்கி வரும் 'குடி'மகன்கள் மெதுார் பஜார் பகுதியில் அமர்ந்து குடிக்கின்றனர்.அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து குடித்துக் கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அவர்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை, பழவேற்காடு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர்.மாலை நேரங்களில் 'குடி'மகன்களின் தொல்லையால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.காவல் துறையினர் மாலை நேரங்களில், அங்கு கண்காணிப்பு மேற்கொண்டு 'குடி'மகன்களின் தொல்லையை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X