தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தில்  பதிவு செய்ய   புதிய செயலி

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:மாவட்டத்தில், நடப்பு சொர்ணவாரி பருவத்தில், நெல் பயிரிட்ட விவசாயிகள் நலனுக்காக, இதுவரை 48 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:மாவட்டத்தில், நடப்பு சொர்ணவாரி பருவத்தில், நெல் பயிரிட்ட விவசாயிகள் நலனுக்காக, இதுவரை 48 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளன.மேலும், நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் புதுமாவிலங்கை, மெதுார், அதிகத்துார், அழிஞ்சிவாக்கம், கீழானுார், கிளிக்கொடி, அகரம், பஞ்செட்டி, பூதுார், காக்கவாக்கம் ஆகிய 14 கிராம விவசாயிகள் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், எளிதில் பதிவு செய்யும் வகையில், புதிய செயலி www.tncsc.tn.gov.in; www.tncsc-edpc.in அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இச்செயலியில் விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார், நில புல எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்யலாம்.இன்று முதல் புதிய செயலில் விவசாயிகள் பதிவு செய்யலாம். விவசாயிகள் மொபைல்போனிற்கு வரும் குறுஞ்செய்தி நேரம், தேதி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X