பெரியாறு அணையில் கள ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் கள ஆய்வு

Added : அக் 01, 2021
Share
கூடலூர்:பெரியாறு அணையில் நேற்று தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி அலுவலர்கள் தமிழக பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன் ஆண்டுதோறும் அணைகள் மற்றும் மின் நிலையங்களில் 21 நாட்கள் கள ஆய்வு செய்வது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குனர் திலகவதி தலைமையில், 30
 பெரியாறு அணையில் கள ஆய்வு

கூடலூர்:பெரியாறு அணையில் நேற்று தமிழக நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி அலுவலர்கள் தமிழக பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன் ஆண்டுதோறும் அணைகள் மற்றும் மின் நிலையங்களில் 21 நாட்கள் கள ஆய்வு செய்வது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை நீர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குனர் திலகவதி தலைமையில், 30 பொறியாளர்களுடன் பெரியாறு அணைப் பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

முன்னதாக இவர்கள் தேக்கடி படகுத் துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 படகுகளில் அணைக்கு சென்றனர். அங்கு பெரியாறு அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை கள ஆய்வு செய்தனர். பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், குமார் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X