சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடுகபட்டி டாஸ்மாக் கடையில் ரெய்டு: ரூ.34,170 பறிமுதல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெரியகுளம்:வடுகபட்டி டாஸ்மாக் கடையில் மழையிலும் லஞ்சஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத ரூ.34,170, பெட்டிக்கடைகளில் சில்லரை விற்பனைக்கு மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்த கணக்குகளை பறிமுதல் செய்தனர்.பெரியகுளம் அருகே வடுகபட்டி டாஸ்மாக் கடை எண் 8526 ல், அரசு நிர்ணயித்தவிலையை விட கூடுதலாக விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. மேலும் தாலுகா முழுவதும்
 வடுகபட்டி டாஸ்மாக் கடையில்  ரெய்டு: ரூ.34,170 பறிமுதல்

பெரியகுளம்:வடுகபட்டி டாஸ்மாக் கடையில் மழையிலும் லஞ்சஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத ரூ.34,170, பெட்டிக்கடைகளில் சில்லரை விற்பனைக்கு மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்த கணக்குகளை பறிமுதல் செய்தனர்.

பெரியகுளம் அருகே வடுகபட்டி டாஸ்மாக் கடை எண் 8526 ல், அரசு நிர்ணயித்தவிலையை விட கூடுதலாக விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. மேலும் தாலுகா முழுவதும் பெட்டிக்கடைகளில் மது விற்பனையும் நடந்து வருகிறது. இவை பெரும்பாலும் வடுகபட்டி கடையிலிருந்து விற்கப்படுவதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நேற்று இரவு 7:50 மணிக்கு மழையிலும் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த மதுரை லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் மவுன்ட்பேட்டன், தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் போலீசார் கடையை மூடி சோதனை நடத்தினர்.

கண்காணிப்பாளர் செல்லப்பாண்டி, விற்பனையாளர்கள் செந்தில், கருப்பசாமி, திருப்பதி, வரதராஜன், உதவி விற்பனையாளர்கள் ரபீக், பாலமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கணக்கில் வராத ரூ.34,170, பெட்டிக்கடைகளுக்கு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த கணக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X