சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலாளி பரிதாப பலி கார் ஓட்டுனர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
மயிலாப்பூர்:விபத்தில் காவலாளி உயிரிழப்பிற்கு காரணமான கார் ஓட்டுனரை, போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர், அப்பு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41. நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் சென்றார்.காரை தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த சென்றபோது, அங்கு காவலாளி ரமேஷ், 42, என்பவர் உறங்கி கொண்டிருப்பதை கவனிக்காமல்

மயிலாப்பூர்:விபத்தில் காவலாளி உயிரிழப்பிற்கு காரணமான கார் ஓட்டுனரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர், அப்பு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41. நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் சென்றார்.காரை தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த சென்றபோது, அங்கு காவலாளி ரமேஷ், 42, என்பவர் உறங்கி கொண்டிருப்பதை கவனிக்காமல் உடலில் ஏற்றிவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அன்றைய தினம் மாலை உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த மயிலாப்பூர் போலீசார், செந்தில் குமாரை நேற்று கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X