சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வாகனம் - லாரி மோதல்: 2 பேர் காயம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
அண்ணா நகர்:அயனாவரம் காவல் நிலையம் அருகே, இரும்பு பொருட்கள் ஏற்றி வந்த லாரி மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதிய விபத்தில், பெண் காவலர் உட்பட இருவர் காயமடைந்தனர்.தலைமை செயலக காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார், 25. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, பெண் காவலர்களான கலையரசி, 26, தேன்மொழி, 25 ஆகியோருடன், ஐ.சி.எப்., - அயனாவரம் வழியில், போலீஸ்
 போலீஸ் வாகனம் - லாரி மோதல்: 2 பேர் காயம்

அண்ணா நகர்:அயனாவரம் காவல் நிலையம் அருகே, இரும்பு பொருட்கள் ஏற்றி வந்த லாரி மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதிய விபத்தில், பெண் காவலர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

தலைமை செயலக காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார், 25. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, பெண் காவலர்களான கலையரசி, 26, தேன்மொழி, 25 ஆகியோருடன், ஐ.சி.எப்., - அயனாவரம் வழியில், போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதிகாலை, 3:30 மணிக்கு, சந்திரகுமார் ஓட்டிவந்த போலீஸ் வாகனம், கொன்னுார் நெடுஞ்சாலை, அயனாவரம் காவல் நிலையம் அருகில், இரும்பு பொருட்களுடன் எதிர்புறத்தில் வந்த லாரி மீது மோதியது. விபத்தில் காயமடைந்த சந்திரகுமார், கலையரசி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; தேன்மொழி காயமின்றி தப்பினார்.அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் ஜட், 50 என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X