சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சிசிடிவி' கேமரா கம்பம் விழுந்து காவலாளி காயம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஆயிரம்விளக்கு:அண்ணாசாலை - கிரீம்ஸ் சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு, நெடுஞ்சாலை துறை சார்பில் ஜே.சி.பி., வாகனத்தை பயன்படுத்தி, மழை நீர் வடிகால் பணி நடந்து வந்தது. அப்போது, ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா இரும்பு கம்பத்தை அகற்ற முற்பட்டனர்.இதில், அவ்வழியாக நடந்து சென்ற, காட்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி

ஆயிரம்விளக்கு:அண்ணாசாலை - கிரீம்ஸ் சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் நள்ளிரவு, நெடுஞ்சாலை துறை சார்பில் ஜே.சி.பி., வாகனத்தை பயன்படுத்தி, மழை நீர் வடிகால் பணி நடந்து வந்தது.

அப்போது, ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா இரும்பு கம்பத்தை அகற்ற முற்பட்டனர்.இதில், அவ்வழியாக நடந்து சென்ற, காட்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி ஆறுமுகம், 51, என்பவர் தலையில் கம்பம் விழுந்தது. உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில், மூளையில் ரத்த கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய ஜே.சி.பி., ஓட்டுனர் ஜான், 38, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X