சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் அநாகரிக பேச்சு ஆசாமிக்கு 'நன்கு கவனிப்பு'

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோயம்பேடு :மது போதையில் விபத்து ஏற்படுத்தி விட்டு, பெண்ணிடம் அநாகரிகமாக பேசி தகராறில் ஈடுபட்ட நீதிமன்ற ஊழியருக்கு, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 57. இவர், எழும்பூர் நீதிமன்றத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே, மது போதையில் இருசக்கர வாகனத்தில்

கோயம்பேடு :மது போதையில் விபத்து ஏற்படுத்தி விட்டு, பெண்ணிடம் அநாகரிகமாக பேசி தகராறில் ஈடுபட்ட நீதிமன்ற ஊழியருக்கு, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 57. இவர், எழும்பூர் நீதிமன்றத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே, மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, தனக்கு முன்னால் கணவருடன் பைக்கில் சென்ற பெண் மீது மோதினார். இதில், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த ஏழுமலை, அந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசியுள்ளார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார், ஏழுமலையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X