சாலையில் குப்பை தொட்டி வாகன ஓட்டிகள் அச்சம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
அம்பத்துார் :அம்பத்துார் மேனாம்பேடு, இந்திரா நகர் அருகே, அணுகு சாலையில் 4 குப்பை தொட்டிகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அதனால், வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும், அதன் அருகில் உள்ள மழை நீர் வடிகாலும் திறந்த நிலையில் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அதில் விழுந்தால்,

அம்பத்துார் :அம்பத்துார் மேனாம்பேடு, இந்திரா நகர் அருகே, அணுகு சாலையில் 4 குப்பை தொட்டிகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அதனால், வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும், அதன் அருகில் உள்ள மழை நீர் வடிகாலும் திறந்த நிலையில் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அதில் விழுந்தால், உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.சில இடங்களில், மாடுகள் சண்டையிட்டு, குப்பை தொட்டிகளை நடுரோட்டிற்கு தள்ளி விடுகின்றன. இதனாலும், இரவில் வாகன ஓட்டிகளின் நிலைமை மோசமாகிறது. குப்பை சேகரிக்கும் பெரிய கன ரக வாகனங்களுக்கு வசதியாக, குப்பை தொட்டிகளை ஆபத்தான வகையில் சாலையில் வைத்துள்ளனர்.எனவே, ஆபத்து ஏற்படாத வகையில், தொட்டிகளில் இருந்து குப்பையை அகற்றிய பின், மழை நீர் வடிகால் மீது அவற்றை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X