தமிழ்நாடு

திரிசூலம் ரயில் நிலையத்தில் நடைமேடையில் மின் விளக்கு

Added : அக் 01, 2021
Share
Advertisement
நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திரிசூலம் மின்சார ரயில் நிலையத்தின், நடை மேடையில் மின் விளக்குகள் எரிய வைக்கப்பட்டு உள்ளன. தாம்பரம் - கடற்கரை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில், திரிசூலம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. இந்நிலையம் வழியாக, தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேல் சென்று வருகின்றனர். 'நிலையத்தின், எக்ஸ்பிரஸ் நடைமேடையில், மின் விளக்குகள்



நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திரிசூலம் மின்சார ரயில் நிலையத்தின், நடை மேடையில் மின் விளக்குகள் எரிய வைக்கப்பட்டு உள்ளன. தாம்பரம் - கடற்கரை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில், திரிசூலம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது. இந்நிலையம் வழியாக, தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேல் சென்று வருகின்றனர். 'நிலையத்தின், எக்ஸ்பிரஸ் நடைமேடையில், மின் விளக்குகள் எரியவில்லை. பின்புறம் வனப்பகுதியாக உள்ளதால், இரவு நேரத்தில் பயணியருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடைமேடையில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குறிப்பிட்ட நடைமேடைக்கு மின் இணைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து விளக்குகளும் எரியும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X