மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஏரிகளில் சமூக விரோத கும்பல் அட்டூழியம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பல கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஏரிகளில், விளக்கு வசதி ஏற்படுத்தாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் ஏரி, புழுதிவாக்கம் சித்தேரி பல ஏக்கர் பரப்பளவு உடையன. இந்த ஏரிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது.நடைபாதை,


பல கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஏரிகளில், விளக்கு வசதி ஏற்படுத்தாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் ஏரி, புழுதிவாக்கம் சித்தேரி பல ஏக்கர் பரப்பளவு உடையன. இந்த ஏரிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது.நடைபாதை, சிறார் பூங்கா, தடுப்பு வேலி, கரையில் கருங்கல் என சகல வசதிகளுடன் புனரமைக்கப்பட்டன. 'ஓபன் பார்'இதன் காரணமாக, தினசரி காலை, மாலை வேளைகளில், நுாற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.மடிப்பாக்கம் ஏரிக்கரை தெரு, வர்த்தக பகுதியாக மாறி, ஏராளமான சிற்றுண்டி கடைகள் உருவாகியுள்ளன. வார விடுமுறை நாட்களில், பெசன்ட் நகர் கடற்கரை போல, மடிப்பாக்கம் ஏரி காட்சிஅளிக்கிறது.புழுதிவாக்கம் சித்தேரியை, நடைபயிற்சிக்கு மட்டும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாலையில் குடும்பத்துடன் இருக்கைகளில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகின்றனர்.அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட இந்த ஏரிக்கரைகளை சுற்றிலும், மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்றளவில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதனால், இரவு நேரங்களில், இரண்டு ஏரிகளும் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது.இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, நடைபாதை இருக்கைகள் குடிமகன்களின், 'ஓபன் பார்' ஆக மாறிவிடுகிறது. மேலும், சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.அஞ்சும் நிலைமது குடித்து, பாட்டில்களை நடைபாதையில் உடைத்து செல்கின்றனர். மறுநாள் நடைபயிற்சி செய்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர். குடிமகன்கள் இரவில் சாப்பிடும் உணவின் மீதியை, அப்படியே இருக்கையில் விட்டு செல்கின்றனர். அதை உண்டு சுகம் கண்ட நாய்கள், நடைபாதையிலேயே தஞ்சமடைவதால், அவற்றை கண்டு நடைபயிற்சி செய்வோர் அஞ்சும் நிலை உள்ளது. ஏரிக்கரைகளில், மாடுகள் உலா வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, ஏரி கரைகளில் மின் விளக்கு பொருத்த வேண்டும்; போலீசார் இரவில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மாநகராட்சி மின்சாரப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டு ஏரிக்கும் மின் விளக்கு பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் மின் விளக்குகள் பொருத்தப்படும்' என்றனர்.- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X