சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஓட்டுனர் மீது கல் வீசி தாக்கு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை, :பேருந்து ஓட்டுனர் மீது, பள்ளி மாணவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விசாரணைஅண்ணாசதுக்கம் - - பெரம்பூர் நோக்கி செல்லும் 'தடம் எண்: 29ஏ' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் மாலை, புரசைவாக்கம் அருகே சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை,

சென்னை, :பேருந்து ஓட்டுனர் மீது, பள்ளி மாணவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விசாரணைஅண்ணாசதுக்கம் - - பெரம்பூர் நோக்கி செல்லும் 'தடம் எண்: 29ஏ' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் மாலை, புரசைவாக்கம் அருகே சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை, ஓட்டுனரும், நடத்துனரும் எச்சரித்தனர்.இதற்கு செவிமடுக்காமல், மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலும், மேற்கூரையிலும் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயணித்தனர். புரசைவாக்கம், தாசப்பிரகாஷ் பேருந்து நிறுத்தம் அருகே, ஓட்டுனர் கீழே இறங்கி, மாணவர்களை உள்ளே வர வற்புறுத்தினார்.ஆத்திரமடைந்த மாணவர்கள், சாலையில் கிடந்த கல்லை எடுத்து, ஓட்டுனரின் முதுகில் எறிந்து தப்பினர். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், புரசைவாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும், முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன், நேற்று மாணவர்களை சந்தித்து அறிவுரை வழங்கினார்.எச்சரிக்கைதொடர்ந்து, உதவி கமிஷனர் ரமேஷ், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாணவர்களை எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X