பொது செய்தி

தமிழ்நாடு

'பஸ் டே' அத்துமீறல் கமல் கட்சி கண்டனம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை :சென்னை நகரில், பஸ் டே' என்ற பெயரில் அத்துமீறும் மாணவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை:மாநகர பேருந்தில், மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணித்ததோடு மட்டுமின்றி, அராஜகத்தில் ஈடுபட்டு, கண்டித்த ஓட்டுனர் மீதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதை மக்கள் நீதி மய்ய தொழிற்சங்க பேரவை வன்மையாக

சென்னை :சென்னை நகரில், பஸ் டே' என்ற பெயரில் அத்துமீறும் மாணவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை:மாநகர பேருந்தில், மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணித்ததோடு மட்டுமின்றி, அராஜகத்தில் ஈடுபட்டு, கண்டித்த ஓட்டுனர் மீதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதை மக்கள் நீதி மய்ய தொழிற்சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது.ஒழுக்கத்தை கற்க வேண்டிய மாணவ சமுதாயத்தினர் சிலரின் ஒழுக்கக்கேடான செயல்களால், மாணவர்கள் தடம் மாறிச் செல்வதை அரசும், காவல்துறையும் கண்காணிக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களும், மாணவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்பார்வையிட வேண்டும். பெற்றோரும், மாணவர்களின் நன்னடத்தைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.ஒழுக்கத்தை போதிக்கும் வகுப்புகளை, பள்ளி, கல்லுாரிகளில் கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேன்மையான மாணவ சமுதாயம் உருவாக, வழி காண வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X