பொது செய்தி

தமிழ்நாடு

ராமாயண காவிய சுற்றுலா ரயில்

Added : அக் 01, 2021
Share
Advertisement
மதுரை:ராமாயணம் நடந்த நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) மதுரையிலிருந்து நவ.16 ல் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது.திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலுார், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மூலம் ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதா மார்ஹி, நேபாளம் ஜனக்புரி சீதா ஜென்ம

மதுரை:ராமாயணம் நடந்த நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) மதுரையிலிருந்து நவ.16 ல் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது.

திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலுார், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மூலம் ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதா மார்ஹி, நேபாளம் ஜனக்புரி சீதா ஜென்ம பூமி, அயோத்தி ராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்கவெற்பூர், அலகாபாத் போன்ற இடங்களை தரிசிக்கலாம்.

14 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் உணவு, தங்குமிடம், ரயில் கட்டணம், உள்ளூர் சாலை போக்குவரத்து செலவு உட்பட நபர் ஒருவருக்கு ரூ.14,490 கட்டணமாகும். இதில் பங்கேற்க வருவோர் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியிருக்க வேண்டும். இந்த ரயிலுக்குப யணச்சீட்டு பதிவு செய்ய 82879 31977 ல் தொடர்பு கொள்ளலாம்.

www.irctctourism.comஇணையத்திலும் பதிவு செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X