தமிழ்நாடு

விபத்தில் கணவரை இழந்த மனைவிக்கு ரூ.85 லட்சம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை :விபத்தில் இறந்த இன்ஜினியரின் மனைவிக்கு, 84.76 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வின் சைமன், 44; இன்ஜினியர். இவர், 2016 ஜூனில், திருவொற்றியூர், எண்ணுார் எக்ஸ்பிரஸ் சாலையில், பைக்கில் சென்றார்.அப்போது, அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி, சைமன் பைக் மீது மோதியது.

சென்னை :விபத்தில் இறந்த இன்ஜினியரின் மனைவிக்கு, 84.76 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வின் சைமன், 44; இன்ஜினியர். இவர், 2016 ஜூனில், திருவொற்றியூர், எண்ணுார் எக்ஸ்பிரஸ் சாலையில், பைக்கில் சென்றார்.அப்போது, அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி, சைமன் பைக் மீது மோதியது. இதில், சாலையில் விழுந்த அவர் மீது, மற்றொரு கன்டெய்னர் லாரி ஏறியது. இதில், சைமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கணவர் இறப்புக்கு, 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சைமனின் மனைவி ஹெப்ஸிபா வசந்தி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது. இதில், 'மனுதாரர் கணவர் இறப்புக்கு, இரண்டு லாரிகளும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயங்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.'எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 84.76 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், எல் அண்ட் டி இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X