தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை :கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஒரு மாத மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மார்பக புற்றுநோயை கண்டறியும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, முப்பரிமான டிஜிட்டல் மேமோகிராம் கருவியுடன், 2018 முதல், மார்பக பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.மையத்தில், இன்று முதல், 31ம் தேதி வரை, ஒரு

சென்னை :கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஒரு மாத மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மார்பக புற்றுநோயை கண்டறியும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, முப்பரிமான டிஜிட்டல் மேமோகிராம் கருவியுடன், 2018 முதல், மார்பக பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.மையத்தில், இன்று முதல், 31ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு, 'மாபெரும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை' தமிழக அரசு நடத்துகிறது. முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று துவக்கி வைக்கிறார்.மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:கட்டாயம், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, ஆரம்ப காலத்திலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.இன்று காலை 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை முகாம் நடைபெறும். முகாமில் பங்கேற்பவர்கள், முதல்வர் காப்பீடு திட்டத்தில், இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். காப்பீடு திட்டம் இல்லாதவர்கள், 1,000 ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கு நேரடியாகவோ அல்லது 73058 77472 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X